Thursday, October 19, 2017
மலைப்பகுதி பள்ளிகளில் ஆள் : ஆசிரியர்கள் தில்லாலங்கடி : ஆய்வில் திடுக் ஆசிரியர்கள் தில்லாலங்கடி : ஆய்வில் திடுக் மாறாட்டம்.
மலைப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், வேலைக்கு செல்லாமல், தங்களுக்கு பதில் சம்பளத்திற்கு ஆட்களை நியமனம் செய்து, பாடம் நடத்தி வருகின்றனர்.
மலைப்பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதி அதிகளவில் வழங்கப்படுகிறது. இந்த நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, டில்லியில் இருந்து, அடிக்கடி அதிகாரிகள் குழுவினர், மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்வர்.அந்த வகையில், கடந்த வாரம், மத்திய கல்வித்துறை அதிகாரிகள் குழுவினர், டில்லியில் இருந்து, வேலுார் மாவட்டம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, அல்லேரி மலைப்பகுதி பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். அதில், ஒரு பெண் ஆசிரியர், தனக்கு பதில் வேறு ஒரு நபரை பாடம் கற்பிக்க, சம்பளத்திற்கு நியமித்துள்ளது தெரியவந்தது. தற்போது அந்த பெண் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விரிவான அளவில் விசாரணை நடத்தப்பட்டது. அதில், மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மாநில அரசு அதிகளவு சம்பளம் அளிக்கிறது. ஆனால், அங்குள்ள
பள்ளிகளிகளுக்கு போய் வர பஸ் வசதி இல்லை. பள்ளிகளில் கழிவறை, மூன்று மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யப்படுகிறது. குடிநீர் வசதி இல்லை. இதனால் அந்த பள்ளிகளில் தங்கி பணியாற்ற, ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இதனால், அந்த பகுதியில் படித்த, வேலையில்லாத பட்டதாரிகளுக்கு, மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்து, தங்களுக்கு பதிலாக பணி செய்ய ஏற்பாடு செய்கின்றனர். மாதம் ஒரு முறை வந்து கையெழுத்து போட்டு விட்டு, தங்கள் சம்பளத்தை வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து, வேலுார் மாவட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் மணி கூறியதாவது:
இந்த பிரச்னை, பல ஆண்டுகளாக உள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளின் தரம் குறைவாக உள்ளதால், அங்கு பணியாற்ற செல்ல ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். வேலுார் மாவட்டத்தில், ஜோலார்பேட்டையில் ஒன்றியத்தில், மூன்று, ஆலங்காயத்தில், 23, மாதனுாரில், நான்கு, அணைக்கட்டில், ஏழு, நாட்றம்பள்ளியில், ஒன்று, பேர்ணாம்பட்டில், இரண்டு என, மலைப்பகுதிகளில் அரசு பள்ளிகள் உள்ளன.
இதுதவிர, அரசு ஆதிதிராவிடர் பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு செல்ல பஸ் வசதி இல்லை.
நிறைய மலைப்பகுதி பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். இதனால் அங்கு தங்கி பணியாற்ற, ஆசிரியர்கள் தயங்குகின்றனர்.
எனவே, மலைப்பகுதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு,
ஆண்டுக்கு, ஒரு முறை, சுழற்சி முறையில்
பதவி காலம் வழங்க வேண்டும்.
மலைப்பகுதி பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்க, போதிய வசதி செய்து கொடுத்தால்தான், இந்த பிரச்னை தீரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோன்ற பிரச்னை, தமிழகம் முழுவதும் உள்ள மலைப்பகுதி
பள்ளிகளில் உள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள், மலைப்பகுதி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த செலவிடும் நிதி வீணாகமல் இருக்க, அங்கு தங்கும் ஆசிரியர்களுக்கு, போதிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என, பல்வேறு ஆசிரியர்
சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.