WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, October 29, 2017

பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் தில்லுமுல்லு சென்னை பல்கலையில் புதிய விதிகள் அமல்.

பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் முறைகேடுகளை தடுக்க, சென்னை பல்கலையில் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிகளுக்கு, செனட் கூட்டத்தில் கல்வியாளர்கள் அனுமதி அளித்தனர்.சென்னை பல்கலை துணைவேந்தர் துரைசாமி, பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புகளில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளை தடுக்க, யு.ஜி.சி., விதிகள் அமலுக்கு வருவதாக அறிவித்துஉள்ளார். இது குறித்த சுற்றறிக்கையை, பல்கலையின் பதிவாளர் ராம.சீனிவாசன் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, ஆர்.சீனிவாசன் ஆகியோர், இணைப்பு கல்லுாரிகளுக்கு அனுப்பினர். இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் குவிந்தது.இந்நிலையில், சென்னை பல்கலையின் செனட் கூட்டம், துணைவேந்தர் துரைசாமி தலைமையில், பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் ஆராய்ச்சி கட்டுரை தொடர்பான புதிய விதிகள் அமலுக்கு வருவது குறித்து, செனட் உறுப்பினர்களின் ஒப்புதல் கோரப்பட்டது.செனட் உறுப்பினர்களான பேராசிரியர்கள் கூறியதாவது: காந்திராஜன்: ஆராய்ச்சி கட்டுரைகளை ஆய்வு செய்யும் நிபுணர்களில், பல்கலை ஆசிரியர்கள் மட்டும் இருக்க வேண்டும் என, கட்டுப்பாடு விதிக்கக் கூடாது. கல்லுாரிகளில் உள்ள திறமையான பேராசிரியர்களை புறக்கணிக்கக் கூடாது.மணிவாசகம்: விதிகளுக்கு ஒப்புதல் அளிக்கும் முன்பே, அதை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அமல்படுத்திவிட்டார். விதிகளில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும்.ரவீந்திரன்: ஆராய்ச்சி படிப்புக்கு, குறிப்பிட்ட நாடுகளின் பேராசிரியர்கள் தான் ஒப்புதல் தர வேண்டும் என, கட்டுப்படுத்தக் கூடாது. வங்க தேசத்தில் கூட திறமையான, சமூக ஆர்வம் உள்ள பேராசிரியர்கள் உள்ளனர்.சேட்டு: அனைத்து பேராசிரியர்களும் தவறு செய்ததாக எடுக்கக் கூடாது. முறைகேடாக ஒப்புதல் கொடுத்ததாக சந்தேகப்படும் வெளிநாட்டு பேராசிரியர் பட்டியலை, கருப்பு பட்டியலில் சேர்க்கலாம். அவர்களின் பெயரை மட்டும் அனுமதிக்க வேண்டாம்ஒப்பிலா மதிவாணன்: உலகளவில், தமிழ் இருக்கைகள் மற்றும் தமிழ் பேராசிரியர் எண்ணிக்கை பெருமளவு சரிந்துள்ளது. மற்ற மாநிலங்களில், தமிழ் பேராசிரியர்கள் மிகச் சிலரே உள்ளனர். எனவே, தமிழுக்கு தனியாக விதிகள் கொண்டு வர வேண்டும்இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையடுத்து, ''செனட் உறுப்பினர்களின் கருத்துகள் அடிப்படையில், பல்கலை அனுப்பிய சுற்றறிக்கையில் திருத்தங்கள் செய்து அமல்படுத்தப்படும்,'' என, துணைவேந்தர் துரைசாமி அறிவித்தார். பின், புதிய விதிகளுக்கு, செனட் ஒப்புதல் அளித்தது. புதிய விதிகள் என்ன? ஆராய்ச்சி கட்டுரையை ஆய்வு செய்ய, தர அங்கீகாரம் பெற்ற, கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த, வெளிநாட்டு பேராசிரியர்கள் இடம் பெற வேண்டும். பிற மாநில பல்கலை பேராசிரியர்களில், 'நாக்' என்ற தேசிய தர அங்கீகாரத்தில், 'ஏ' கிரேடு பெற்ற பல்கலை அல்லது தேசிய தர வரிசை பட்டியலில், முதல், ௧௦௦ இடம் பெற்றவர்களால், ஆராய்ச்சி கட்டுரை ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆய்வு செய்யும் பேராசிரியர் குறித்து ஒப்புதல் பெறும் விண்ணப்பத்தில், அவரது இரண்டு ஆய்வு கட்டுரைகளை, ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும். யு.ஜி.சி., அங்கீகாரம் அளித்த, ஆய்வு இதழ்களில் மட்டுமே கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும். ஆராய்ச்சி கட்டுரைக்கு ஒப்புதல் தரும் பேராசிரியர்களை, மாணவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டால் அவர்களுக்கு பட்டம் கிடைக்காது. இவ்வாறு பல விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.