தீபாவளி விடுமுறையை சரிகட்ட, சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை முன்னிட்டு, நேற்றும், நேற்று முன்தினமும், பள்ளி, கல்லுாரிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால், தீபாவளியை கொண்டாட, வெளியூர்களுக்கு சென்ற ஆசிரியர்கள், மாணவர்கள் பலர், இன்னும் ஊர் திரும்பவில்லை. அதனால், இன்று பள்ளிகள் திறந்தாலும், பாடம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், நாளையும், நாளை மறுநாளும், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், ஏராளமான ஆசிரியர்கள், இன்று விடுப்பு போட்டுள்ளனர். எனவே, அந்த ஆசிரியர்கள், விடுபட்ட பாடங்களை நடத்த வசதியாக, அடுத்து வாரம் முதல், சனிக்கிழமைகளில், கூடுதல் வகுப்புகள் நடத்த வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
ReplyDelete2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......
மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
நாள்: 14:11:2017
இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
நேரம் : காலை 10:30.
கோரிக்கைகள்: 📣
🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.
🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.
🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.
அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!
2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
மேலும் விபரங்களுக்கு:
மாநில ஒருங்கிணைப்பாளர்
வடிவேல் சுந்தர்80122776142
மாநில பொருளாளர்
பிரபாகரன் 9047294417
மாநில பொறுப்பாளர்
முருகேசன் 950095482
மாநில அமைப்பாளர்
பரமேஸ்வரன் 9942661187