Wednesday, November 29, 2017
குரூப் - 2 தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு.
குரூப் - 2 உட்பட இரண்டு தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழக அரசுத் துறைகளில், குரூப் - 2 பதவியில் காலியாக உள்ள, 1,094 இடங்களை நிரப்ப, 2016 ஆகஸ்டில் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 509 பேருக்கு, டிச., 7 முதல், 11 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. அதேபோல், இந்து அறநிலையத்துறை செயல் அதிகாரி பணியில், 49 இடங்களுக்கு, இந்த ஆண்டு, ஜூனில் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற, 65 பேருக்கு, டிச., 12ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இந்த விபரங்கள், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.