WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 17, 2017

தலைமை ஆசிரியர்களுக்கு எகிறும் சம்பளம் : கூடுதல் பொறுப்பு வழங்க அரசு திட்டம்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், 1.25 லட்சம் ரூபாய் சம்பளம் பெற உள்ளனர். அதனால், அவர்களுக்கு கூடுதல் பணி வழங்க, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில், 57 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில், 1.30 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளிகளில், 5.58 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதில், அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆறு லட்சம் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதை கணக்கிடும் போது, அதிகபட்சமாக, 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, 1.25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் உயர்ந்துள்ளது. இதைக் கண்டு, அதிகாரிகளே அதிர்ச்சியில் உள்ளனர். இத்துறையின் அதிகாரிகளுக்கே, அதிகபட்சம், 90 ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் கிடைக்கும் நிலையில், தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் அதிக சம்பளம் பெறுவது, பள்ளிக்கல்வி, நிதித்துறை அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பள உயர்வால், அரசுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில், தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்கலாம் என, ஆலோசனை நடந்து வருகிறது. நகர, ஊரக பகுதிகளில், மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, கூடுதலாக சில பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் இணைத்து வழங்கலாமா அல்லது கல்வி அலுவலக பொறுப்புகளை பகிர்ந்தளிக்கலாமா என, ஆலோசனை நடந்துள்ளது. அதேபோல், மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கும், கூடுதல் பாட வகுப்புகள் மற்றும் சிறப்பு பயிற்சி பணிகள் வழங்குவது குறித்து, அதிகாரிகள் பரிசீலினை செய்வதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.