அண்ணா பல்கலையில் பேராசிரியர் வேலை வாங்கித்தருவதாக 6.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த அ.தி.மு.க.,வை சேர்ந்த ராமநாதபுரம் நகராட்சி மாஜி கவுன்சிலரான நாகஜோதி, உட்பட 5 பேர் போலீசார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ராமநாதபுரம் மூலக்கொத்தளம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த பஞ்சவர்ணம் மனைவி முத்துலட்சுமி. இவரது மகன் சரவணன். எம்.இ., பட்டதாரியான இவர் வேலை தேடி வந்தார். இந்நிலையில்,அண்ணா பல்கலையில் பேராசிரியர் வேலை வாங்கித்தருவதாக கூறி, ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலரும், அ.தி.மு.க., மாவட்ட மகளிர் அணி துணை செயலாளரான நாகஜோதி உறுதி அளித்துள்ளார்.இதற்காக, 5.8.15முதல் 17.7.16 வரையிலான காலத்தில் முதல் தவணையாக 4 லட்சம் ரூபாயும், இரண்டாவது முறை 2.50 லட்சம் ரூபாய் நாகஜோதி வங்கி கணக்கிலும் செலுத்தி உள்ளார். தனக்கு அரசியல் பலம் உள்ளதால், நிச்சயம் வேலை வாங்கித்
தருகிறேன், என உறுதி அளித்துள்ளார்.ஆனால், குறிப்பிட்ட
படி வேலை வாங்கித்தரவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போது, நாகஜோதியும்
அவரது குடும்பத்தினரும்கொலை மிரட்டல்
விடுத்துள்ளனர்.
இதுகுறித்து முத்துலட்சுமி புகாரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நாகஜோதி, அவரது கணவர் முனியசாமி, மகன் இளையராஜா, அவரது மனைவி பவித்ரா மற்றும் உறவினர் சூர்யா ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.