'தொழிற்கல்வி மட்டுமின்றி, வேறு பாடங்களில் உயர்கல்வி படித்தால், அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்' என, அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தொழிற்கல்வி பாடம் கற்பிக்கின்றனர். மற்ற பாட ஆசிரியர்களுக்கு, அவர்களின் உயர்கல்வி தகுதி, அனுபவத்துக்கு ஏற்ப பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, இந்த சலுகைகள் வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கூட்டமைப்பின், மாநில அமைப்பாளர், ஜனார்த்தன் தலைமையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினர்.
தொழிற்கல்வி ஆசிரியர்களின் தொகுப்பூதிய பணிக்காலத்தில், 50 சதவீதத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு இல்லாத பணியிடங்களுக்கு, தேர்வு நிலை தர ஊதியம் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மற்ற ஆசிரியர்களை போல, வெவ்வேறு பாடங்களில் உயர்கல்வி பெற்றிருந்தால், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும், இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும், வலியுறுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.