WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 11, 2017

ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தி அரசு பள்ளி மாணவ– மாணவிகள் போராட்டம்.

ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தி அரசு பள்ளி மாணவ– மாணவிகள் போராட்டம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே அருங்குறுக்கை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இரண்டும் குறுகிய இடத்தில் 3 கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒரு ஆசிரியரும், அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒரு ஆசிரியரும் நிரந்தரமாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். மற்ற ஆசிரியர்கள் அவ்வப்போது மாறுதலாகி வெளியூர்களுக்கு சென்று விடுகின்றனர்.

எனவே இந்த 2 பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் மாணவ–மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. ஆகவே காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி மாணவ–மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அந்த கிராம மக்கள் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை தொடக்கப்பள்ளி மாணவ– மாணவிகள் அனைவரும் பள்ளியை விட்டு வெளியே வந்து பள்ளி முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் அவர்களது பெற்றோர் சிலரும் கலந்துகொண்டனர்.

அப்போது பள்ளியில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால் அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பும் வரை தினமும் போராட்டம் செய்யப்போவதாக தெரிவித்தனர்.

இந்த திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.