பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில், அரசியல் புள்ளிகளின் தலையீடு குறித்த விசாரணை துவங்கியுள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 விரிவுரையாளர்களை நியமிக்க, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில், செப்டம்பரில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில், 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், நவ., 7ல் வெளியாகின. அதில், முறைகேடுகள் நடந்ததாக, புகார் எழுந்தன. இதை தொடர்ந்து, தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. இது குறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 156 தேர்வர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, தேர்வர்களுக்கு உதவிய ஏஜென்ட்கள், அவர்களுக்கு உதவிய அரசியல் புள்ளிகள் ஆகியோர் குறித்து, விசாரணை துவங்கியுள்ளது. டி.ஆர்.பி.,க்காக பணியாற்றிய, தனியார் தேர்வு மதிப்பீட்டு நிறுவன ஊழியர்கள், பள்ளிக் கல்வி ஊழியர்கள் ஆகியோர் அளித்த தகவல்களின் படி, முறைகேட்டில் தொடர்புடைய அரசியல் புள்ளிகளின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. விரைவில், அவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.