WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 30, 2017

10ம் வகுப்பு பொது தேர்வு; ’தக்கல்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்!

                                            
நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு “சிறப்பு அனுமதி திட்டத்தில்“ (தக்கல்) தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.


அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்த நாட்களுக்குள் (22.12.2017 முதல் 29.12.2017) ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்கள் ““ சிறப்பு அனுமதி திட்டத்தின்“ (தக்கல்) கீழ் ஆன்லைனில் வரும் ஜனவரி 1, 2018ம் தேதி முதல் ஜனவரி 4, 2018க்குல் விண்ணப்பிக்கலாம். 29.12.2017) ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறிய தனித் தேர்வர்கள் ““ சிறப்பு அனுமதி திட்டத்தின்“ (தக்கல்) கீழ் ஆன்லைனில் வரும் ஜனவரி 1, 2018ம் தேதி முதல் ஜனவரி 4, 2018க்குல் விண்ணப்பிக்கலாம். 


அரசு தேர்வு சேவை மையங்கள் 


ஆண் தனித்தேர்வர்களும், பெண் தனித்தேர்வர்களும் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்திட கல்வி மாவட்ட வாரியாக ஆண், பெண் தனித்தேர்வர்களுக்கு தனித்தனியே சேவை மையங்கள் (Service Centre) அமைக்கப்பட்டுள்ளன. தனித்தேர்வர்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.


கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் விவரத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். 


மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களிலும் அறியது கொள்ளலாம். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்கள் மூலம் மட்டுமே நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


தகுதியானவர்கள் 

அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள்மட்டுமே கருத்தியல் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் அறிவியல் பாடத்திற்கான செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பித்து செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, ஆனால் கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் விடுபட்டுள்ள தனித்தேர்வர்கள் தற்போது கருத்தியல் தேர்வுக்கு ““சிறப்பு அனுமதி திட்டத்தின்“ (தக்கல்) கீழ் விண்ணப்பிக்கலாம்.
மேற்படி தேர்வர்கள் செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற சம்பயதப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலயது கொண்டதற்கான உரிய ஆதாரத்தைப் பெற்று கருத்தியல் தேர்வு விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் தோல்வியுற்ற பாடங்களில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தை தவிர ஏனைய பாடங்களில் தோல்வியுற்றிருப்பின், தோல்வியுற்ற பாடங்களை மட்டும் புதிய பாடத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். 
பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற தேர்வர்கள் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்து, உரிய பயிற்சி வகுப்பிற்கு 80ரூ வருகைப்புரியதவர்கள் அதற்கான ஆதாரத்தை சேவை மையத்தில் சமர்ப்பித்த பின்னர் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம் 


தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணத் தொகை ரூ.125/- இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.500/- மற்றும் ஆன்லைனில் பதிவுக் கட்டணமாக ரூ.50/- உட்பட மொத்தம் ரூ.675/- ஐ சேவை மையங்களில் (Service Centre) பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்.


சமர்பிக்க வேண்டியவை 

ஏற்கெனவே SSLC தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள், தோல்வியுற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அறிவியல் பாட செய்முறை வகுப்பில் கலந்து கொண்டற்கான தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்பட்ட அத்தாட்சி சான்று இணைத்தல் வேண்டும்.
நேரடியாக முதன் முறையாக SSLC தேர்வெழுதுவோர், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான அசல் மாற்று சான்றிதழ் / அசல் ESLC சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இத்தேர்வர்களும் வ.எண்.2ல் குறிப்பிட்ட அத்தாட்சி சான்றினை இணைக்க வேண்டும்.SSLC தேர்வெழுதுவோர், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான அசல் மாற்று சான்றிதழ் / அசல் ESLC சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இத்தேர்வர்களும் வ.எண்.2ல் குறிப்பிட்ட அத்தாட்சி சான்றினை இணைக்க வேண்டும்.
தேர்வு மையம் 


இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் அந்தந்த கல்வி மாவட்டங்களிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மைய விவரம் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்படும்.


தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.