WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 23, 2017

விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு? விசாரணையை துவக்கியது போலீஸ்.


அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், முறைகேடு நடந்துள்ளதா என, போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058
விரிவுரையாளர் பணிக்கு தேர்வு நடத்தி, நவ.,7ல் முடிவு வெளியிட்டது. தேர்ச்சி பெற்றவர்களில், இன்ஜினியரிங் அல்லாத பாடப்பிரிவினருக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பல தேர்வர்களுக்கு விடைத்தாளில் உள்ளதை விட, அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதாக, சிலர் ஆதாரங்களுடன், டி.ஆர்.பி.,க்கு புகார் மனுக்கள் அனுப்பினர். டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன், உறுப்பினர் செயலர், உமா மற்றும் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அப்போது, பல தேர்வர்களுக்கு அதிக மதிப்பெண் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, டி.ஆர்.பி., சார்பில், சில தினங்களுக்கு முன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரிக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, கமிஷனர், விஸ்வநாதன் உத்தரவிட்டு உள்ளார். போலீசார் முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளனர். அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்ற, 1.33 லட்சம் பேர், இந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது முதல், தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட நாள் வரை, பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர். குறுக்கு வழியில் பணியில் சேர முயற்சி செய்ததாக, 200 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும், டி.ஆர்.பி., அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு; முக்கிய புள்ளிகளுக்கு பணம் கைமாறி இருக்கிறதா என்பது குறித்தும், போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர். புகார் மீது வழக்கு பதிவு செய்து, குற்றம் செய்தோரை கைது செய்து, சிறையில் அடைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.