சுற்றுப்புற தூய்மை, கற்பித்தல் திறனில் சிறந்து விளங்கும் பள்ளிக்கு, 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிற பள்ளிகளோடு ஒப்பிடும் போது புதுமையும், மாணவர்களுக்கு தேவையான கற்றல் மற்றும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தந்திருக்க கூடிய பள்ளிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, பள்ளிகல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் உள்ளிட்டோரை தலைமையாக கொண்டு மாநில குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் உருவாக்கப்படும் குழு, ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்திருக்கும் பள்ளி, கற்பித்தலில் புதுமை, வளாகத் துய்மை, பெற்றோர் - மாணவர் - ஆசிரியர்களுடன் இணைந்த செயல்பாடு உள்ளிட்டவை குறித்து கண்டறிந்து, மேற்கண்ட பள்ளிகளில் பட்டியலை மாநில குழுவுக்கு அனுப்பி வைக்கும்.
பரிந்துரைக்க தகுதி வாய்ந்த பள்ளி குறித்து முதன்மை கல்வி அலுவலர் அனுப்பும் பட்டியலை தொடர்ந்து, மாநில குழு ஆய்வு செய்யும். ஆய்வுக்கு பின் தேர்வு செய்யப்படும், உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிக்கு, ரூ. 2 லட்சம் ரூபாய் மற்றும் விருது; துவக்க, நடுநிலைப்பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய், விருது மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தால் வழங்கப்படும். மாநிலத்தில், 128 பள்ளிகள்; மாவட்டத்துக்கு நான்கு பள்ளிகள் கல்வியாண்டு நிறைவுக்குள் தேர்வு செய்யப்பட உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.