அடுத்த கல்வியாண்டுக்கான, எல்.கே.ஜி., ’அட்மிஷன்’ காலம் துவங்க உள்ளது. எனவே, உரிய ஆவணங்களை தயார்படுத்த, பள்ளிகள் அறிவுறுத்தி உள்ளன.
ஆண்டு தோறும், ஜூனில் கல்வி ஆண்டு துவங்கி, மே மாதம் முடியும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், புதிய வகுப்புக்கான மாணவர்கள், ஜூனில் சேர்க்கப்படுவது வழக்கம்.
ஆனால், பெரும்பாலான தனியார், சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் பள்ளிகள், ஜனவரி முதல் மாணவர் சேர்க்கையை துவங்கி, பிப்ரவரிக்குள் முடித்து விடுகின்றன.
இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கான, ஆயத்த பணிகளை, தனியார் பள்ளிகள் துவங்கி உள்ளன. டிச., மாதம் துவங்கியதில் இருந்தே, பெற்றோர் பலர் பள்ளிகளுக்கு நேரில் சென்று, ’அட்மிஷன்’ விண்ணப்பம் கேட்டு வருகின்றனர்.
பல பள்ளிகள், இந்த ஆண்டும், ’ஆன்லைன்’ விண்ணப்ப பதிவை மேற்கொள்கின்றன. எனவே, பள்ளிகளின் இணையதளத்தை பார்க்க, பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டி.ஏ.வி., குழும பள்ளிகள், கோபாலபுரம் நேஷனல் பப்ளிக் பள்ளி, கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாமந்திர், செட்டிநாடு வித்யாஷ்ரம், இந்து சீனியர் செகண்டரி பள்ளி, பத்மா சேஷாத்ரி பாலபவன் உள்ளிட்ட பெரும்பாலான, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், மாணவர் சேர்க்கை அறிவிப்புகளை, இணையதளத்தில் வெளியிட உள்ளன.
அதற்கு முன், குழந்தைகளுக்கான அடையாள ஆவணங்களை தயார் செய்து கொள்ள, பெற்றோர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதாவது, மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், பெற்றோரின் கல்வித்தகுதி சான்றிதழ்கள், முகவரி சான்றிதழ் ஆகியவற்றை, தயாராக வைத்திருக்க வேண்டும். சில பள்ளிகள், குழந்தைகளின் தடுப்பூசி போடப்பட்ட விபரத்தையும், குழந்தைகளுக்கான உடற்தகுதி சான்றிதழையும் கேட்கின்றன.
இந்த ஆவணங்களை தற்போதே, பெற்றோர் தயார் செய்து வைத்து கொள்ளலாம். பெரும்பாலான பள்ளிகள், மறைமுகமாக நன்கொடை பெறுவது, முன் காலங்களில் நடந்துள்ளது. ஆனால், சிபாரிசு அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு, முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக, பள்ளி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.
எனவே, உரிய நேரத்தில் விண்ணப்பம் பெற்று, அதை பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே, விரும்பிய பள்ளிகளில், எல்.கே.ஜி., இடம் கிடைக்கும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.