பள்ளி மாணவர்களுக்கு, உயர் கல்வி ஆலோசனை கூறவும், மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கவும், '14417' என்ற, கட்டணமில்லா தொலைபேசி, அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, 1.98 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது.
ஆலோசனை மையம்
அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், அவர்களுக்கு உயர் கல்வி செல்வதற்கான வழிமுறைகளை விவரிக்கவும், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், கட்டணமில்லா தொலைபேசி ஆலோசனை மையம் அமைக்கப்பட உள்ளது.
இனிமேல், '14417' என்ற எண்ணில், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் மற்றும் பள்ளிக் கல்வி ஊழியர்கள் தொடர்பு கொள்ளலாம்.
ரூ.1.98 கோடி
அவற்றில், உயர் கல்வி படிப்பதற்கான தகவல்கள், தேர்வு விபரங்கள், பாடத்திட்ட சந்தேகங்கள், பள்ளிகளின் கட்டமைப்பு பிரச்னைகள்... நலத்திட்டம் கிடைக்காமை, மன அழுத்த பிரச்னைகள் போன்றவை குறித்து, மாணவர், பெற்றோர், ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.
இந்த திட்டத்துக்காக, தமிழக அரசு, 1.98 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், மாணவர்களுக்கு உடல்நலம், உளவியல் ஆலோசனைகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் விபரங்கள் குறித்த தகவல்களையும் வழங்க, திட்டமிடப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.