WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, December 5, 2017

ஆசிரியர் பணிக்கு தகுதிப்படிப்பு அவசியம்!

ஆசிரியப்பணியை தொடர விரும்புவோர், மத்திய அரசின், தகுதிப்படிப்பில், வெற்றி பெறுவது அவசியம். இதில் சேர, எவ்வித திணிப்பும் அளிக்கப்படவில்லை,” என, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப்யாதவ் தெரிவித்தார். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில், ஆசிரியர்களுக்கான தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில், தொடக்க வகுப்புகளுக்கு பாடம் எடுப்பவர்கள், ஆசிரியர் பட்டய படிப்புடன், ’டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். உயர்நிலை வகுப்பில் பாடம் எடுப்பவர்கள், பட்டப்படிப்புடன், பி.எட்., முடித்திருப்பதோடு, ’டெட்’ தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில், ஆசிரியராக பணிபுரிவோர், பள்ளிக்கல்வி இறுதித்தேர்வில், 50 சதவீத மதிப்பெண் இல்லாமலும், ’டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாமலும் இருப்பின், மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., எனப்படும் தேசிய திறந்தவெளி பள்ளியில், இரண்டாண்டு டிப்ளமோ, ஆசிரியர் பட்டய படிப்பில் சேர, வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்படிப்பை, வரும் மார்ச் 2019 க்குள் முடிக்க, கால அவகாசம் அளிக்கப்பட்டது. தமிழகம் முழுக்க, 26 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுசார்ந்து, கோவையில் நடந்த, தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற, பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ்விடம், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் முறையிட்டனர். இதற்கு விளக்கம் அளித்த, பள்ளிக்கல்வித்துறை செயலாளர், மத்திய அரசு, ஆசிரியர்களுக்கான தகுதியை மேம்படுத்தி கொள்ள, 2010ல் அறிவுறுத்தியது. ஐந்து ஆண்டு கால அவகாசம் அளித்தும், பலரும் தகுதியை மேம்படுத்தி கொள்ளாததால், தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது, கடைசி பஸ் ஏறுவது போன்றது. வாய்ப்பை தவறவிட்டால், வீட்டுக்கு திரும்புவது உறுதி என தெரிவித்தார். இது, தனியார் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில், கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் கூறுகையில்,”மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., தகுதிப்படிப்புக்கு, மாவட்ட அளவில் மையங்கள் அமைத்து, பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடக்க வகுப்புகளுக்கு பாடம் நடத்த, ஆசிரியர் பட்டய கல்வி முடித்திருப்பது அவசியம். இப்படிப்பு முடிக்காமல், அதிக கல்வித் தகுதி இருந்தாலும், வகுப்பு நடத்தக் கூடாது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, தகுதிப்படிப்பில் சேர, எவ்வித திணிப்பும் அளிக்கப்படவில்லை. ஆசிரியப்பணியை தொடர விரும்புவோர், உரிய கல்வித்தகுதி பெறுவது அவசியம்,” என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.