'கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், ஜனவரியில், தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.
ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், சுப்பிரமணியன், மாயவன், மீனாட்சிசுந்தரம் ஆகியோர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் அலுவலகத்தில், கோரிக்கை
மனு அளித்தனர்.அவர்கள் அளித்த பேட்டி:அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், 2016 ஜன., 1 முதல், ஊதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 21 மாதம் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது; அதை வழங்க வேண்டும். ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகளையும்,
குறைகளையும் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வேண்டும்.நிறைவேற்றாவிட்டால், ஜனவரி இறுதியில், சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடத்த, முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.