WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, January 5, 2018

10ம் வகுப்பில் ஃபெயில் ஆனாலும் ஆசிரியராகலாம்: பஞ்சாபில்தான் இந்த அவலம்!

பத்தாம் வகுப்பில் அறிவியல், ஆங்கிலம் போன்ற பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் பலரும் பஞ்சாப் மாநில அரசுத் துவக்கப் பள்ளியின் ஆசிரியராக பணியாற்றி வரும் அவலம் தெரிய வந்துள்ளது. இது ஏதோ ஒரு சில எண்ணிக்கை என்று நினைக்க வேண்டாம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ள இந்த தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் துவக்கப் பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பெரும்பாலான ஆசிரியர்களின் நிலை இதுதான். அரசுத் துவக்கப் பள்ளி மாணாக்கர்களின் கல்வித் திறன் கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்து வருவது குறித்தும், அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்க பெற்றோர் விரும்பாததன் காரணம் குறித்தும் அறிந்து கொள்ள விரும்பிய மோஹ்ரெவாலா கிராமத் தலைவர் ஹர்ப்ரீத் சிங் சாந்து என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். பஞ்சாப் மாநிலம் மோகாவில் பணியாற்றும் ஆசிரியர்களில் 59 பேர் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள்தான். அதில் 31 பேர் கணிதத்திலும், 10 பேர் ஆங்கிலத்திலும், 11 பேர் சமூக அறிவியலிலும் தோல்வி அடைந்தவர்கள். இவர்கள் இப்படியிருக்க, கடந்த ஆண்டு துவக்கப் பள்ளி மாணவர்களில் 1 லட்சம் மாணவர்கள் கணிதத்தில் தோல்வி அடைந்துள்ளனர். 70 ஆயிரம் பேர் ஆங்கிலத்தில் தோல்வி அடைந்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெறும் 10 மாவட்டங்களைப் பற்றிய தகவல்கள்தான் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. அதில் 313 ஆசிரியர்கள் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களே என்பதும், இதுவரை மறுதேர்வு எழுதி அவர்கள் தேர்ச்சி பெறாததும் தெரிய வந்துள்ளது. இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறன் ஏன் இந்த அளவுக்குக் குறைந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிவதாக சாந்து கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.