WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, January 7, 2018

3,235 அரசு பணியிடங்களை நிரப்ப 23 வகை தேர்வுகள் நடத்த திட்டம்.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 3,235 இடங்களை நிரப்ப, இந்த ஆண்டு, 23 வகை தேர்வுகள் புதிதாக நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி.,யின் சார்பில், ஆண்டுதோறும், தேர்வு திட்டமிடல் அறிக்கை வெளியிடப்படும். 2017ல், 12 ஆயிரம் இடங்களுக்காக, 24 வகை தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, 18 தேர்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. மீதமுள்ள, ஆறு தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளன.இந்நிலையில், புதிய ஆண்டில் நடத்தப்படும் தேர்வு விபரம் அடங்கிய திட்டமிடல் அறிக்கையை, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் அறிவித்தார். இதன்படி, 3,235 காலி இடங்களை நிரப்ப, 23 தேர்வு கள் புதிதாக நடத்தப்பட உள்ளன. அதிகபட்சமாக, 'குரூப் - 2' நேர்முக தேர்வு உள்ள பதவிக்கு, 1,547 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.