தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலை பள்ளிகளுக்கு ஆய்வக பொருட்கள் இல்லாததால், செய்முறை தேர்வு கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்தாண்டு 150 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாகவும், 100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளிகளுக்கு செய்முறை தேர்வுக்கு தேவையான ஆய்வக பொருட்கள் வழங்கப்படும். ஆனால், தரம் உயர்த்தப்பட்ட 150 உயர்நிலை பள்ளிகளுக்கு இன்னும் ஆய்வக பொருட்கள் வந்து சேரவில்லை.
இம்மாதம் இறுதியில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆய்வக பொருட்கள் இல்லாமல் எப்படி செய்முறை தேர்வை நடத்துவது, அதற்கான மதிப்பெண்ணை மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் வழங்குவது என அந்த பள்ளி ஆசிரியர்கள் குழம்பி போய் உள்ளனர்.
ஆய்வக பொருட்கள் கேட்டு பல முறை அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மற்றும் பள்ளிக் கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. எனவே, தேர்வு நெருங்குவதை கருத்தில் கொண்டு ஒன்றிரண்டு நாட்களுக்குள் ஆய்வக பொருட்களை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும், என உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.