WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, February 8, 2018

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய பொதுமக்கள் நிதி வழங்கலாம் தமிழக அரசு அறிவிப்பு.

                                     ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய பொதுமக்கள் நிதி வழங்கலாம் தமிழக அரசு அறிவிப்பு
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதற்காக ரூ.10 கோடி நிதியையும் ஒதுக்கி உள்ளது. மேலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், திரைப்படத்துறையினர் என பலதரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். இந்தநிலையில் பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதியை வழங்கலாம் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தமிழக அரசின் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஹார்வர்டு தமிழ் இருக்கை (IITS–HARVARD Tamil Chair) என்ற வங்கி கணக்கில் தமிழ் இருக்கைக்காக காசோலை, வரைவோலை மற்றும் இணையம் வழியாக தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், பெருமக்கள் தங்களது நிதியை மனமுவந்து வழங்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.