வரும் 2022-ஆம் ஆண்டிற்குள் கல்வித் திட்டங்களுக்கு ஒரு ரூ.1 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியக் கல்வித்துறை எதிர்கொண்டு வரும் சவால்கள், அதற்கேற்ப கல்விமுறையை ஒழுங்குபடுத்துவது மற்றும் மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக, தில்லியில் கல்வித்துறை சார்பில் 350-க்கும் மேற்பட்ட உயர்கல்வி நிறுவனங்களை சேர்ந்த துணைவேந்தர்கள், இயக்குநர்கள் பங்கேற்ற கல்வித்துறை கருத்தரங்கு மாநாடு நடைபெற்றது.
விஞ்ஞான் பவனில் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது தலைமையிலான அரசு கல்வித்துறையில் முதலீடு செய்வதில் அதிக கவனம் செலுத்துவதாக கூறினார். கல்வித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரைஸ் எனப்படும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வரும் 2022-ஆம் ஆண்டிற்குள் கல்வி திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
பழங்கால இந்தியாவில் அமைந்திருந்த நாலந்தா, தட்சசீலம், விக்கிரமசீலம் போன்ற பல்கலைக்கழகங்கள், கற்பதற்கும் புதுமை படைப்பதற்கும் சமமான முக்கியத்துவம் அளித்ததாகவும் கூறினார்.
பள்ளிக்குழந்தைகள் மத்தியில் புதுமை படைக்கும் போக்கை ஊக்குவிப்பதற்காகவே, அடல் டிங்கரிங் லேப் ஆய்வகத் திட்டம் தொடங்கப்பட்டதாக கூறிய பிரதமர் மோடி, மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள, ஹெஃபா எனப்படும் உயர் கல்வி நிதி முகமை, உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கு நிதியுதவிகளை செய்யும் என்று கூறினார்.
ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்கள், பாடத்திட்டம், ஆசிரியர் நியமனம், விரிவாக்கம் உள்ளிட்டவற்றை தாங்களே தீர்மானிக்கும் வகையில் மத்திய அரசு தன்னாட்சி வழங்கி உள்ளது என்றார். இந்தியாவில் உயர் கல்வித் துறை முன்னெப்போதும் கண்டிராத வளர்ச்சி இது என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.