ஒரு சிலிண்டர் கார்டுதாரர்களுக்கு, இம்மாதம் முதல் மண்ணெண்ணெய் நிறுத்தப்பட உள்ளது.ரேஷன் கடைகளில், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், 13.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வீடுகளில் இரண்டு சமையல் காஸ் சிலிண்டர் உள்ளோருக்கு, மண்ணெண்ணெய் வழங்குவதில்லை. ஒரு சிலிண்டர் உள்ளோருக்கு, 2 லி., மண்ணெண்ணெய், சிலிண்டர் இல்லாதோருக்கு, மாநகராட்சியில் 6 லி., நகராட்சியில் 4 லி., கிராமங்களில் 2 லி., மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.மத்திய அரசு அனுமதிப்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தமிழகத்திற்குரிய ஒதுக்கீட்டை வழங்குகின்றன. 10 ஆண்டுக்கு முன், 64 சதவீதமாக இருந்த ஒதுக்கீடு, படிப்படியாக குறைந்து, தற்போது, 39 சதவீதமாக உள்ளது.இம்மாதம் முதல், ஒரு சிலிண்டர் கார்டுதாரருக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை வழங்கல் துறை ரத்து செய்துள்ளது.ரேஷன்கடை பணியாளர்கள் கூறுகையில், 'ஏற்கனவே அறிவித்தப்படி ஒதுக்கீடு இல்லாததால், பெயரளவில்தான் மண்ணெண்ணெய் வழங்குகிறோம். 'தற்போது முன்னறிவிப்பின்றி ஒரு சிலிண்டர் உள்ளோருக்கும் மண்ணெண்ணெயை நிறுத்திவிட்டனர். இதனால் கார்டுதாரர்கள் எங்களிடம் பிரச்னை செய்வர்' என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.