பூவி வெப்பமடைதல், காடுகள் அழிப்பு, நீர், நிலம், காற்று மாசு என பூமியின் அழிவு எப்போதோ தொடங்கிவிட்டது. அது மட்டுமின்றி பூமி இயல்பாகவே, தானாகவே மெல்ல மெல்ல அழிந்து கொண்டு தான் இருக்கின்றது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு, அதை நம்பும் ஆராய்ச்சியாளர்களும் உண்டு, புரளிகள் கிளப்பும் கூட்டமும் உண்டு என்பது தான் நிதர்சனம்..! உலகம் 'இப்படித்தான்' அழியும் - விஞ்ஞானிகள் விளக்கம்..! அப்படியாக வரும் நவம்பர் மாதம் மொத்தம் 15 நாட்களுக்கு உலகம் முழுமையாக இருளில் மூழ்கும் என்று நாசா அறிவித்து உள்ளதாக புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தகவல் : வரும் நவம்பர் 15-ஆம் தேதி முதல் நவமபர் 29-ஆம் தேதி வரை மொத்தம் 15 நாட்களுக்கு உலகம் அடர் இருளில் மூழ்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

உறுதி : அந்த தகவலை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உறுதி செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

நிகழ்வு : மேலும் கடந்த 1 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாகவும் இது போன்ற நிகழ்வு நடக்கவிலை என்றும் நாசா தெரிவித்து உள்ளதாக தெரிகிறது.

கருத்து :
அது மட்டுமின்றி நவம்பர் 15-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு
தொடங்கி நவம்பர் 30-ஆம் தேதி மாலை 4.15 மணி வரை உலகம் இருளால் மூழ்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அறிக்கை : இது தொடர்பாக 1000 பக்கங்கள் கொண்ட விளக்க அறிக்கையை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நாசா நிகழ்த்தி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

நவம்பர் ப்ளாக் அவுட் : வீனஸ் கிரகமும், ஜப்பிட்டர் கிரகமும் இணையொத்த நிலையை அடையும் இந்த நிகழ்வை விஞ்ஞானிகள் 'நவம்பர் ப்ளாக் அவுட்' (November Black out) என்று குறிப்பிடுகின்றனர்.

புரளிகள் : இதற்கு முன்பு இது போன்றே, உலகம் இருளில் மூழ்கும் என்று பல முறை புரளிகள் வெளியாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாசா : மேலும் நாசா இது சார்ந்த எந்த விதமான அதிகாரப்பூர்வமான கருத்தையும் தெரிவிக்கவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வைரல் : இது சார்ந்த செய்திகள் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக பரவி கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.