அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்பிற்கான புதிய பாடத்திட்டம் தொடர்பாக அக்.,30 வரை கருத்து தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.ஆங்கிலவழி கல்வி மோகத்தால் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை தவிர்க்க நடப்பு கல்வியாண்டில் 32 அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி மழலையர் வகுப்புகள் துவங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவ்வகுப்பிற்கான புதிய பாடத்திட்டங்களை கல்வித்துறை வகுத்துள்ளது.காலை 9:30 முதல் 10:00 மணிவரை தனிநபர் விருப்ப செயல்பாடு, 10:20 வரை தொடக்க நிலை செயல்பாடுகள் (இறை வணக்கம், உடற்பயிற்சி, வருகைப்பதிவு, பகிர்ந்து கொள்தல்) 10:30 வரை கலந்துரையாடல், 11:00 வரை செய்வது மூலம் கற்றல். 11:00 முதல் 11:10 வரை ஸ்நாக்ஸ், 11:30 வரை மொழி வளர்ச்சி, 11:50 வரை உடல் இயக்க வளர்ச்சி, 12:10 வரை உணவுக்கு தயார்செய்தல், மதியம் 1:00 மணி வரை உணவு. 3:00 மணிவரை துாக்கம், 3:20 வரை ஸ்நாக்ஸ், 3:40 வரை சமூக மன எழுச்சி, 4:00க்குள் பள்ளி முடிவு பெறும்.ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இதை, ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பார்த்து அக்., 30 க்குள் கருத்து பதிவு செய்யலாம் என கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.