துணைவேந்தர் நியமனம் உட்பட உயர்கல்வியில் நடந்த ஊழல்கள் குறித்து, உயர்மட்ட குழு விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்' என, மதுரை காமராஜ்பல்கலை பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியது.கூட்டமைப்பு தலைவர் சீனிவாசன் கூறியதாவது:துணைவேந்தர் நியமனத்தில், பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கூறினார். பின், 'அது கல்வியாளர் குரல்' என்றார்.ஊழல் அவரது கவனத்திற்கு சென்றது வரவேற்கத்தக்கது. பல்கலைகள் மட்டுமல்ல; கல்லுாரிகளில் நடக்கும் அனைத்து பணி நியமனங்களிலும் லஞ்சம் பெறப்படுகின்றன. இதுகுறித்து, உயர்மட்டக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.பேராசிரியை நிர்மலா தேவி யாருக்காக மாணவியரை அழைத்தார், 'பல்கலை உயர் அதிகாரிகள்' என, அவர் யாரை குறிப்பிட்டார் என்பதை அரசு விளக்க வேண்டும்.பல்கலையில் கல்யாணி, செல்லத்துரை துணைவேந்தர்களாக இருந்தபோது, பணி நியமனம் உள்ளிட்டவற்றில் ஏராளமான முறைகேடு நடந்துள்ளதாக, 2016 - 17ம் ஆண்டு தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.மதுரை காமராஜ் பல்கலை புதிய துணைவேந்தர் நியமனம் வெளிப்படையாக இருக்க வேண்டும். விண்ணப்பிப்போர் விபரம், தேடல் குழு தீர்மானங்களை இணைய தளத்தில் பதிவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.