WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, October 21, 2018

யு.ஜி.சி., முதல் தர பட்டியலில் அழகப்பா பல்கலைக்கு இடம்.

பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அனுமதி யின்றி, தொலைநிலை கல்வி நடத்த, அழகப்பா மற்றும் சாஸ்த்ரா பல்கலைகளுக்கு, சலுகை அளிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள் உள்ளிட்ட, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், யு.ஜி.சி.,யின் அனுமதி பெற்ற பின், படிப்பை நடத்தலாம்.

அனுமதிகல்வி உதவி தொகை, ஆராய்ச்சி உதவி தொகை உள்ளிட்டவற்றுக்கும், யு.ஜி.சி., அனுமதி பெற வேண்டும். அதேபோல, தொலைநிலை கல்வி நடத்த, ஒவ்வொரு பல்கலைக்கும், யு.ஜி.சி.,யில் அங்கீகாரம் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், தொலைநிலை கல்விக்கு அனுமதி பெற்ற பல்கலைகளின் பட்டியலை, செப்டம்பரில், யு.ஜி.சி., வெளியிட்டது.

எந்த பல்கலைக்கு, எந்த பாடப்பிரிவை நடத்தலாம் என்ற அனுமதி விபரம் இடம் பெற்றது.இந்நிலையில், முதல் தர மதிப்பீட்டு பட்டியலில் இடம் பெற்ற, 15 பல்கலைகளின் பெயர் பட்டியலை, யு.ஜி.சி., நேற்று அறிவித்தது. இந்த, 15 பல்கலைகளும், யு.ஜி.சி., யின் விதிகளின் படி, &'நாக்&' என்ற, தேசிய தர நிறுவனத்தின், &'ஏ - பிளஸ்&' கிரேடு பெற்ற பல்கலைகள். சலுகைஇந்த பல்கலைகள், யு.ஜி.சி.,யின் அனுமதி பெறாமல், தொலைநிலை கல்வியை நடத்தலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியலில், தமிழகத்தில் செயல்படும், காரைக்குடி அழகப்பா, தஞ்சாவூர் சாஸ்த்ரா ஆகிய பல்கலைகள் இடம் பெற்றுள்ளன. புதுடில்லியில் உள்ள, மத்திய அரசின், வெளிநாட்டு வணிகத்துக்கான இந்திய உயர்கல்வி நிறுவனமும், இந்த சலுகையை பெற்றுள்ளது. மற்ற பல்கலைகள், ஆந்திரா, கர்நாடகா, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங் களை சேர்ந்தவை.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.