WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 18, 2018

பர்கூர் மகளிர் அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் நீக்கத்தில் முறைகேடு

தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் முன்னறிவிப்பு இல்லாமல் விதியை மீறி பணி நீக்கம் செய்ததில் முறைகேடு நடைபெறுகிறதா என சந்தேகம் தமிழக கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.உதாரணமாக பர்கூர் கல்லூரியில் தமிழ்த்துறையில் 12
பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில் 2 பேர் நிரந்தர பேராசிரியர்கள் 5 பேர் கௌரவ விரிவுரையாளர்கள் மொத்தம் 12 பேருக்கு 7 பேர் பணிபுரிந்து வந்த சமயத்தில் 5 மாதம் சம்பளம் தராமல் தமிழ்த்துறையில் இருந்து 1 கௌரவ விரிவுரையாளர் பணி நீக்கம் செய்யப் பட்டது மிகுந்த கேள்விகனைகளை எழுப்பி உள்ளது. இதே போல் ஆங்கிலம், இயற்பியல் மற்றும் வணிகவியல் துறைகளில் தலா ஒருவர் வீதம் மொத்தம் 4 பேர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். இதனால் கல்லூரி முதல்வரோ துறைத்தலைவர்களோ பாதிக்கப் பட்ட கௌரவ விரிவுரையாளர்களுக்கு உதவ இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதே போன்று கடலூர், சிதம்பரம், சீர்காழி, விருத்தாசலம் ,மன்னார்குடி மற்றும் கும்பகோணம் போன்ற 10 மேற்பட்ட கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் திடீரென கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவால் 5 மாத சம்பளம் வாங்காத நிலையில் வெளியேற்றப் பட்டுள்ளனர். இதை விட இன்னொரு தகவல் கிடைத்துள்ளது. அதாவது அண்ணாமலை பல்கலை கழக மிகை பேராசிரியர்கள் மீண்டும் வர உள்ளதாக உயர்கல்வி வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளன. அவ்வாறு அண்ணாமலை பல்கலை கழக மிகை பணியாளர்கள் பணி நிரவல் செய்யப்பட்டால் இன்னும் அதிக படியான கௌரவ விரிவுரையாளர்கள் பாதிக்கப் பட நேரிடும் என கௌரவ விரிவுரையாளர்கள் வருந்துகின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.