ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் பிழைகள் கண்டு பிடிக்கப்பட்டு, அவற்றை திருத்தி படிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு இரண்டாம் பருவசமூகஅறிவியல் புத்தகத்தில் 5 பிழைகள்இருப்பதை மாநில ஆராய்ச்சி மற்றும்பயிற்சி நிறுவனம் கண்டறிந்து திருத்திஉள்ளது.பிழைகளும், திருத்தங்களும்* குடிமையியல் பகுதி &'மனித உரிமைகள்&' பாடத்தில் (பக்கம் 124), மலாலா பற்றியசெய்தி இடம்பெற்றுள்ளது. அதில், இரண்டாவது பத்தியில் விடுபட்ட, &'நான்பொது இடத்தில் பேசினேன். அதனால்அடிப்படைவாதிகளின் இலக்கானேன்&' என்ற வரிகளை தக்க இடத்தில் சேர்த்து படிக்க வேண்டும்.
அதே பாடத்தில் (பக்கம் 125), &'போக்ஸோ சட்டம்&' துணை தலைப்பில், POCSO என்றஆங்கில வார்த்தை POSCO என்றும், தமிழில் &'போக்ஸோ&' என்பதற்கு பதில்&'பாஸ்கோ&' என்றும் தவறாக குறிப்பிடப்பட்டு இருப்பதை சரியாக திருத்தி படிக்கவேண்டும்.
அதே பாடத்தில் (பக்கம் 128) இடஒதுக்கீடு என்ற பத்தியில் 8 வது வரியில் &'பெண்களுக்கு33 சதவீதம்&' என்று இருப்பதை &'பெண்களுக்கு 30 சதவீதம்&' என்றும், அதே பக்கத்தில்இடஒதுக்கீடு என்ற துணை தலைப்பில் கொடுக்கப்பட்டு இருக்கும் அட்டவணையில், &'பழங்குடியினர் 3 சதவீதம்&' என்று அச்சாகி இருப்பதை &'பழங்குடியினர் 1 சதவீதம்&' என்றும் சரியாக திருத்தி படிக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.