ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின், இலவச கட்டாயகல்வி உரிமை சட்டப்படி, நாடுமுழுவதும், ஆசிரியர் பணிக்கு, &'டெட்&' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வுஅமலாகிஉள்ளது. உத்தரவுதேசியகல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில்உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது.பள்ளிகல்வித் துறை சார்பில், ஆசிரியர்தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும்அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம்தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில்வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறுமாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து, நமதுநாளிதழில், இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி வெளியானதை தொடர்ந்து, தேர்வு நடத்துவதற்கான பணிகளில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், டெட் தேர்வை நடத்துவதற்கான பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. இந்தத்தேர்வை, தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்தபழைய பாடத்திட்டப்படி நடத்தாமல், தற்போது அறிமுகமாகியுள்ள, புதியபாடத்திட்டப்படி நடத்த, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது:ஏற்கனவே, தமிழகத்தில் கல்வித்தரம் குறைந்து காணப்படுகிறது. பழைய பாடத்திட்டப்படி, ஆசிரியர்களைதேர்வு செய்தால், தரம் இன்னும் சரியும். எனவே, புதிய பாடத்திட்டத்தின் படி, ஆசிரியர்களை தேர்வு செய்தால் தான், பணிக்கு வருவோர், சிறப்பாக பாடம்நடத்த முடியும்.இவ்வாறு கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.பல தரப்பினரும்கோரிக்கை விடுப்பதால், டெட் தேர்வுக்கு, தமிழக அரசின் புதியபாடத்திட்டப்படி, கேள்விகளை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆலோசனை இது குறித்து, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி ஆகியோரிடம், டி.ஆர்.பி., தலைவர், ஜெயந்தி மற்றும்உறுப்பினர் செயலர், உமா ஆலோசனை நடத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.