வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது என்றும், இலங்கை முதல் தென்மேற்கு வங்கக்கடல் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதாகவும், சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று தெரிவித்தார். இன்று பகல் 12.15 மணியளவில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் பாலச்சந்திரன். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய வடகிழக்கு பருவமழை.. கோபியில் வீடுகளுக்குள் வெள்ளம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வட கிழக்கு பருவமழை இன்று முதல் துவங்கியுள்ளது. தற்போழுது இலங்கை முதல் தென் மேற்கு வங்க கடல் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. தென் தமிழகத்தில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நவம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழையும், கடலோரப் பகுதிகளில் கனமழையும் பெய்யும். காற்றின் வேகம் இயல்பாகவே இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புழலில் 11 சென்டிமீட்டர், கேளம்பாக்கத்தில் 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அடுத்த இரு நாட்களில் சென்னையில் ஓரிரு இடங்களில் இடைவெளி விட்டு மழை பெய்யக்கூடும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.