எம்.பி.ஏ., மற்றும், எம்.பார்ம்., படிப்புகளுக்கான நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., படிப்பில் சேர, 'ஸீமேட்' என்ற, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல, எம்.பார்ம்., படிப்பில் சேர, 'ஜிபேட்' என்ற, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான, நுழைவு தேர்வை, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., அறிவித்துள்ளது.
இந்த இரண்டு நுழைவு தேர்வுகளும், ஜன., 28ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான, 'ஆன்லைன்' முன்பதிவு, நேற்று துவங்கியது; நவ., 30 வரை பதிவு செய்யலாம். விபரங்களை, https://ntagpat.nic.in மற்றும் https://ntacmat.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.