WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, November 6, 2018

பாலிடெக்னிக் கல்லூரி தேர்வில், பறக்கும் படை உறுப்பினர்களுக்கு மீண்டும்அதிகாரம்.

பாலிடெக்னிக் கல்லுாரி தேர்வில், பறக்கும் படை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரத்து அதிகாரம், திரும்ப பெறப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும், 700க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரி மாணவர்களுக்கான முதல் கட்ட செய்முறை தேர்வுகள், 22ம்
தேதி வரை நடந்தன. தற்போது, எழுத்து தேர்வுகள் நடந்து வருகின்றன.இத்தேர்வு பணிகளை கண்காணிக்க, இணை இயக்குனர்கள் தலைமையில், கல்லுாரி முதல்வர்களை உறுப்பினர்களாக கொண்ட, பறக்கும் படை அமைப்பது வழக்கம். முறைகேடு கண்டறியப்பட்டால், தேர்வுகளை ரத்து செய்ய, பறக்கும் படைக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.கடந்தாண்டு மட்டும், இதுபோன்று முறைகேடு புகார் காரணமாக, 58 கல்லுாரிகளில் செய்முறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

தற்போது நடந்து வரும் பருவத்தேர்வுகள் முதல், பறக்கும் படை உறுப்பினர்களின் தேர்வுகளை ரத்து செய்யும் அதிகாரம், பறிக்கப்பட்டுஉள்ளது.தேர்வுகளை ரத்து செய்வதற்கு பதிலாக, புகார் அறிக்கையை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தொழில்நுட்ப கல்வி இணை இயக்குனர் ஒருவர் கூறுகையில், 'பறக்கும் படை உறுப்பினர்கள், முறைகேடுகளை கண்டறிந்தால், உரிய கமிட்டிக்கு புகார்களை அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது, முறைகேடு செய்பவர்களுக்கே சாதகமாக இருக்கும்' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.