WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 5, 2018

ஸ்டிரைக்:ஜாக்டோ- ஜியோ அறிவிப்பு.

''மாநிலம் முழுவதும், 10 லட்சம் அரசு ஊழியர்கள், நவ., 27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்,'' என, திருமங்கலத்தில், 'ஜாக்டோ- ஜியோ' எனப்படும், அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர், தாஸ் தெரிவித்தார்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் தாஸ் தலைமையில் மதுரை, திருமங்கலத்தில் நேற்று நடந்தது. பின், தாஸ் கூறியதாவது:'பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம்' என, அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. ஆட்சிக்கு வந்த பின் நிறைவேற்றவில்லை.

இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பள முரண்பாடுகள் களையப்படவில்லை. பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி, எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பதில், பள்ளிகளை மூட முயற்சி நடக்கிறது. இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், நவ., 27 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். போக்குவரத்து ஊழியர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்கின்றனர்; பஸ்கள் இயங்காது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.