தமிழக பள்ளி கல்வியில், தேர்வுத் துறை இயக்குனரின் பதவிக் காலம், வரும், 30ம் தேதி முடிகிறது. புதிய அதிகாரியை நியமிக்க, பள்ளி கல்வித் துறை
பட்டியல் தயாரித்துள்ளது.தமிழக பள்ளி கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, அரசு தேர்வுத் துறை இயக்குனரகத்தின் இயக்குனராக உள்ள, வசுந்தராதேவி, மார்ச், 31ல் ஓய்வு வயதை எட்டினார்.ஆனால், பொதுத் தேர்வு நடத்துவது, தேர்வு முடிவு வெளியிடுவது போன்ற காரணங்களால், அவரின் பணிக் காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டது.இந்நிலையில், தேர்வுத் துறை இயக்குனருக்கான பணிக் கால நீட்டிப்பும், 30ம் தேதியுடன் முடிகிறது. எனவே, புதிய இயக்குனரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கான பட்டியல் தயாரிப்பு பணிகளை, பள்ளி கல்வித் துறை துவங்கியுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.