WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, June 23, 2019

இடமாறுதல் கவுன்சிலிங் அறிவிப்பு.

'ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங், ஜூலை, 8 முதல் துவங்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், அரசு பள்ளி ஆசிரி யர்களுக்கு இடமாறுதல் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான, கவுன்சிலிங் விதிமுறைகள், நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதற்கான அரசாணையை, பள்ளி கல்வி முதன்மைச் செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார்.இந்த முறை, 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை இணையதளத்தில் உள்ள, ஆசிரியர் விபரங்களின் அடிப்படையில், 'ஆன்லைன்' வாயிலாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள், ஒரே பள்ளியில் பணியாற்றியவர்களுக்கு மட்டுமே, இடமாறுதல் வழங்கப்பட உள்ளது. மேலும், ஒரு பணி தொகுப்பில், 100 காலி பணியிடங்கள் இருந்தால் மட்டும், இடமாறுதல் வழங்கப்படும். மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, இடமாறுதல் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை, 28ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். ஜூலை, 8 முதல், 15ம் தேதி வரை, பல கட்டங்களாக, இடமாறுல் கவுன்சிலிங் நடக்கும் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.