மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் சீனிவாசன். இவர் கடந்த 2001-ம் ஆண்டில் பணியில் இருந்தபோது இறந்தார். இதனால் கருணை வேலை கேட்டு அவரது மகள் பரணி சக்தி 2006-ம் ஆண்டில் விண்ணப்பித்தார். இவரது மனுவை நிராகரித்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதை ரத்து செய்து கருணை வேலை வழங்க உத்தரவிடக்கோரி அவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
கருணை வேலை போன்ற சிறப்பு வேலைவாய்ப்பு திட்டங்களை அமல்படுத்தும் சமயத்தில் அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கருணை வேலை வழங்கும் போது சம்பந்தப்பட்ட நபர்களின் விவரங்களை சேகரிப்பதில் அதிகாரிகள் எவ்வித சமரசத்துக்கும் இடம் அளிக்கக்கூடாது. ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே கருணை வேலை வழங்க வேண்டும். கருணை வேலை என்பது விதிவிலக்கானது. அதை சட்டப்பூர்வ உரிமையாக யாரும் கோர முடியாது.
இளைஞர்களின் கனவு
லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களின் கனவு, கருணை வேலை வழங்கும் திட்டத்தால் பறிபோய்விடக்கூடாது. அரசு வேலையில் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் போது ஏழை குடும்பங்களை சேர்ந்த தகுதியான நபர்கள் அரசு வேலைக்கு தேர்வாகும் சூழ்நிலை உருவாகும்.
அரசு ஊழியர் இறந்ததால் உண்மையிலேயே பாதிப்பை சந்திப்பவர்களுக்கு வேலை வழங்கும் திட்டமாக மட்டுமே கருணை வேலை திட்டத்தை பார்க்க வேண்டும்.
தலைமை செயலாளருக்கு உத்தரவு
எனவே தமிழகத்தில் கருணை வேலைவாய்ப்பு திட்டத்தை தலைமை செயலாளர் முழுமையாக சீராய்வு செய்து, அரசியலமைப்பு கொள்கைக்கு ஏற்ற வகையில் கருணை வேலைவாய்ப்பு திட்டத்தை அனைத்து துறைகளிலும் அமல்படுத்தும் வகையில் உரிய உத்தரவுகள், வழிகாட்டுதல்கள், சுற்றறிக்கையை பிறப்பிக்க வேண்டும்.
இந்த உத்தரவுகள், வழிகாட்டுதல்கள், சுற்றறிக்கைகளை மீறும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடைமுறைகளை 8 வாரத்திற்குள் முடிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.