WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, May 7, 2020

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை எப்படி?

''பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும் இடைவெளி உள்ளவாறு, அட்டவணை அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று அவர் அளித்த பேட்டி:பள்ளிக்கல்வித் துறையில், பாடப் புத்தகங்கள், நோட்டுகள் தயாரிக்கும் பணி, 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் வழங்கும் வகையில், தயார் நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவ - மாணவியருக்கு வழங்க, ஷூ, சாக்ஸ் மற்றும் புத்தக பைகளும் தயார் நிலையில் உள்ளன. பிளஸ் 1 வகுப்புக்கு, நிலுவை யில் உள்ள ஒரு தேர்வு குறித்து, முதல்வருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும்.'நீட்' தேர்வுக்காக, 'ஆன்லைன்' மூலம் பயிற்சி அளிக்கப்படும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை, ஒவ்வொரு பாடத்துக்கும், இடைவெளி உள்ளவாறு, அட்டவணை அமைக்கப்படும்.


வகுப்பில் எவ்வாறு ஆசிரியர் பயிற்சி அளிப்பாரோ, அதே நடையில், 'யு டியூப்' மற்றும் கல்விச் சேனலில், 10ம் வகுப்பினருக்கு கல்வி போதிக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.