'அரசு உத்தரவை மீறி, மாணவர்களுக்கு தேர்வு நடத்தப் போவதாக கூறும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி கல்வித் துறை எச்சரித்துள்ளது.
'ஊரடங்கு நடைமுறைகள் முடிந்து, மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்போது, மாணவர்களுக்கு, கடந்த ஆண்டு படித்த பாடங்களில் தேர்வு நடத்தப்படும்; அந்த தேர்வின்படியே தேர்ச்சி வழங்கப்படும்' என, சில பள்ளிகள் தரப்பில், பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, தமிழக மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.