WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, May 19, 2020

கொரோனா முகாம் பேராசிரியர்கள் அச்சம்.

 கொரோனா தனிமை முகாமாக செயல்படும் கல்லுாரிகளில், பணிக்கு வர சொல்வதால், இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர்கள் பீதி அடைந்துள்ளனர்.ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், நேற்று முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், சுழற்சி முறையில், அலுவலக பணிக்கு வர அறிவுறுத்தப் பட்டுள்ளனர். கல்லுாரி ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களும், சுழற்சி முறையில் கல்லுாரிக்கு வந்து, பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பல அரசு கல்லுாரிகள் மற்றும் பல்கலையின் உறுப்பு கல்லுாரிகளில், கொரோனா தனிமை முகாம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அவற்றில், வெளி மாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கல்லுாரிகளுக்கு, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், அலுவலக பணிகளுக்கு வந்தால், ஏதாவது ஒரு வகையில், தங்களுக்கும் தொற்று பாதிக்கும் என, அச்சம் அடைந்துள்ளனர்.எனவே, கல்லுாரிகளில் இருந்து தனிமை முகாம்களை மாற்றும் வரை, அங்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.