WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, May 14, 2020

மாலை நேர வகுப்பு கிடையாது அரசு கல்லுாரிகளில் மாற்றம்.



அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், காலை, மாலை நேர வகுப்பு களை ரத்து செய்து, ஒரே பிரிவாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, உயர் கல்வி துறை முதன்மை செயலர் அபூர்வாவுக்கு, கல்லுாரி கல்வி இயக்குனர் ஜோதி வெங்கடேசன் அனுப்பியுள்ள கடிதம்:அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், தற்போது, காலை, 7:30 முதல் மதியம், 1:30 வரை; மதியம், 1:30 முதல், மாலை, 6:30 வரை என, இரண்டு பிரிவுகளாக, வகுப்புகள் நடக்கின்றன. இதில், காலையில் வரும் மாணவ - மாணவியர், காலை உணவு கூட உண்ண முடியாமல், அவசரமாக, கல்லுாரிக்கு வர வேண்டியுள்ளது. அதனால், பல மாணவியருக்கு, ரத்த சோகை பிரச்னை ஏற்படும் நிலை உள்ளது.

மாலை நேர வகுப்பில் படிக்கும் மாணவ - மாணவியர், 6:30 மணிக்கு பின், வீடுகளுக்கு திரும்புவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, இரண்டு பிரிவு சுழற்சி வகுப்புகளை ரத்து செய்து, 2006க்கு முன் இருந்தது போல், ஒரே பிரிவாக, கல்லுாரிகளை நடத்தலாம் என, கருதப்படுகிறது. அதாவது, காலை, 9:30 முதல், மாலை, 4:30 மணி வரை, வகுப்புகளை நடத்தலாம். அதற்கு ஏற்ப, இரு பிரிவு மாணவ - மாணவியரும், ஒரே நேரத்தில் படிக்கும் வகையில், கூடுதல் வகுப்பறை, ஆய்வகம், கணினி அறை, நுாலக கட்டடம் கட்ட வேண்டும்.

எனவே, 715 கூடுதல் வகுப்பறைகளுக்கு, 135.85 கோடி; இருக்கைகள் வாங்க, 11.68 கோடி; மேஜை, நாற்காலிகள் வாங்க, 2.55 கோடி ரூபாய் உட்பட, மொத்தம், 150.08 கோடி ரூபாய் ஒதுக்கி, நிர்வாக ஒப்புதல் வழங்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.