செமஸ்டர் தேர்வு, ஜூலைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், அனைத்து பாடங்களையும், 'ஆன்லைனில்' நடத்தி முடிக்க, இன்ஜினியரிங் கல்லுாரி களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து கல்லுாரிகளுக்கும், இரண்டு மாதங்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால், ஏப்ரலில் நடக்க வேண்டிய தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளை, ஜூலையில் நடத்தலாம் என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், நடத்தப்படாமல் உள்ள சில பாடங்களை, ஆன்லைன் வழியில் விரைந்து முடிக்க, அண்ணா பல்கலை அறிவுறுத்தியுள்ளது. ஜூலை வரை அவகாசம் கிடைத்துள்ளதால், விடுபட்ட பாடங்களையும் முடித்த பின், தேர்வை நடத்தலாம் என, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.