WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 9, 2020

தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆர்பாட்டம் செய்ய முடிவு.

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவச் சேர்க்கையில், உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி, நாளை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக, தனியார் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் தலைமை நிலைய செயலர் பழனிவேலு அளித்த பேட்டி:அரசு பள்ளி மாணவர்களுக்கான அனைத்து சலுகைகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் உண்டு.ஏழை மற்றும் விளிம்பு நிலை மாணவர்களே, அரசு உதவி பள்ளிகளில் படிக்கின்றனர். அவர்களுக்கும், அரசின் சார்பில், 'நீட்' இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இணையாக, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களும், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து, தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி, மருத்துவ மாணவர் சேர்க்கையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில், அரசு உதவி பெறும் மாணவர்களையும் சேர்க்க வேண்டும்,மேலும், உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு, ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது வரம்பை, முன்னர் இருந்தது போல், 57 ஆக நிர்ணயிக்க வேண்டும்.அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், நாளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.