WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 9, 2020

அலட்சிய அதிகாரிகளுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை.

'நிர்வாக நலனுக்கு எதிராக, அதிகாரிகள் செயல்படுவதால், வழக்குகளில் பாதகமான தீர்ப்பு வருகிறது.


அதற்கு காரணமான அதிகாரிகளிடம் இருந்து, இனி, வழக்கு செலவு வசூலிக்கப்படும்' என்று, பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.இது தொடர்பாக, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இணை இயக்குனர் பொன்னையா அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:பள்ளி கல்வித்துறைக்கு எதிரான வழக்குகளில், உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால், துறைக்கு பாதகமாக தீர்ப்புகள் வருகின்றன.

மேல்முறையீடு, சீராய்வு மற்றும் சிறப்பு விடுப்பு மனு ஆகியவற்றை, உடனுக்குடன் தாக்கல் செய்யாமல், நிர்வாக நலனுக்கு முரணாக, திட்டமிட்டே காலம் தாழ்த்தி தாக்கல் செய்கின்றனர்.அதனால், அந்த மனுக்கள், நீதிமன்றத்தில்ஏற்கப்படாமல், துறைக்கு பாதகமான தீர்ப்புகள் வருகின்றன. இதை தொடர்ந்து, பலரும் அதேபோன்ற வழக்கு தொடர்கின்றனர்.இதனால், அரசுக்கு வீணான நிதி இழப்பு ஏற்படுகிறது. மேலும், மாவட்ட அதிகாரிகளின் அலட்சியங்களால், உயர் அதிகாரிகளுக்கு அவப்பெயர் ஏற்படுவதுடன், தேவையற்ற இடர்பாடுகளும் உருவாகின்றன.

எனவே, இனி வரும் காலங்களில், துறைக்கு பாதகமாக தீர்ப்புகள் வந்தால், அதில் தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்களே, அதற்கு முழு பொறுப்பாவர் என, திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது.இதில், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து, எந்த விளக்கமும் ஏற்கப்படாது. வழக்குக்கான நிதி இழப்பும், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.