பி.எட்., மாணவர்கள், 'ஆன்லைன்' வகுப்பு நடத்தி, கற்பித்தல் பயிற்சி பெற, ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவிட்டுள்ளது.
பல்கலை சார்பில், அனைத்து கல்லுாரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பல்கலையில் இணைப்பு பெற்ற, அனைத்து சுயநிதி கல்வியியல் கல்லுாரிகளில், 2020- - 21ல், பி.எட்., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், தேசிய கல்வியியல் கவுன்சில் விதிப்படி, 16 வாரங்கள், பள்ளிகளுக்கு நேரில் சென்று, கற்றல், கற்பித்தல் பயிற்சி பெற வேண்டும்.
ஆனால், கொரோனா தொற்றால், பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனவே, பி.எட்., மாணவர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெற்று, வரும், 23ம் தேதி முதல், ஆன்லைன் வழியில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி, கற்பித்தல் பயிற்சி பெற வேண்டும்.பள்ளிகள் திறந்த பின், நேரில் சென்று, பயிற்சி பெற வேண்டும்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.