WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, December 15, 2020

ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளில் கலைப்பிரிவு துவங்க வலியுறுத்தல்.

ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளிகளில் பொருளாதாரம், வரலாறு, வணிகவியல் உள்ளடக்கிய கலைப்பிரிவு பாடத்திட்டத்தை துவக்க அரசு முன் வர வேண்டும்'' என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் விருப்பப்படி பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். பள்ளி கல்வி துறையில் சி.இ.ஓ., டி.இ.ஓ., பி.இ.ஓ., பதவிகளில் உள்ள அதிகாரிகள் பி.எட்., பட்டம் பெற்றுள்ளனர். ஆனால் ஆதிதிராவிடர் நலத்துறையில் பி.எட்., பட்டம் படிக்காதவர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்படுவதால் குறைகளை களை வதில் பிரச்னை எழுந்துள்ளது. அதனால் மூத்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும்.சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் பெயரில் விருது வழங்க வேண்டும்.

இந்த பள்ளிகளில் படித்த 7 மாணவர்கள் 'நீட்' தேர்வு மூலம் இந்தாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். மொத்தமுள்ள 86 மேல்நிலை பள்ளிகளில் 44 பள்ளிகளில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திட்டம் துவங்கப்படவில்லை. இங்கு துவங்கிட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.