தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி டிவி வழியே பாடங்கள் நடத்தப்படுகின்றன. பொதுமக்களின் கருத்துகளை கேட்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பாட திட்டம் குறைப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
40% பாட திட்டங்கள் குறைப்பு
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 50 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம், குறைக்கப்பட்ட பாடத்திட்டம் பற்றிய முழு விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இந்த குறைக்கப்பட்ட பாடதிட்டம் குறித்த விவரங்கள், பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட உள்ளன. அதன் அடிப்படையில், இந்த கல்வி ஆண்டில், மீதம் உள்ள நாட்களில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.