கல்லுாரி மாணவர்கள் அனைவரும், ஆன்லைனில் படிக்க வசதியாக, தினசரி, '2ஜி.பி., டேட்டா' இலவசமாக பெறும் வகையில், 'எல்காட்' நிறுவனம் வழியாக, இலவசமாக, 'டேட்டா கார்டு'கள் வழங்கும் புதிய திட்ட த்தை, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.
இந்த வசதி, ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும். தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால், தமிழகத்தில் உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் சேர்க்கை விகிதம், 32 சதவீதத்தில் இருந்து, 49 சதவீதமாக உயர்ந்துள்ளது.கல்லுாரி மாணவர்கள், சிறந்த கணினி திறன்களை பெற, அரசு கல்லுாரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு சார்பில் இலவசமாக, 'லேப்டாப்' வழங்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களின் நலனுக்காக, கல்வி நிறுவனங்கள், இணையம் வழியே வகுப்புகளை நடத்தி வருகின்றன.இணைய வழி வகுப்புகளில், மாணவர்கள் கலந்து கொள்ள வசதியாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், கல்வி உதவித் தொகை பெறும் சுய நிதி கல்லுாரிகள் ஆகியவற்றில் படிக்கும், 9.69 லட்சம் மாணவர்களுக்கு, அரசு சிறப்பு திட்டம் வகுத்துள்ளது.இதன்படி, இம்மாதம் முதல் ஏப்ரல் வரை, நான்கு மாதங்களுக்கு, தினமும், 2 ஜி.பி., டேட்டா பெற, எல்காட் நிறுவனம் வழியே, இலவச டேட்டா கார்டுகள் வழங்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டு உள்ளார். மேலும், இதை நல்ல முறையில் பயன்படுத்தி, மாணவர்கள் கல்வியில் மேன்மேலும் சிறக்க வேண்டும் என, முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.'வீடியோ' பாடங்களை 6 மணி நேரம் கவனிக்கலாம்!அரசு அறிவித்துள்ள, இலவச டேட்டா கார்டுகள் வழியே, மாணவர்கள் நாள் முழுதும், இணையதளத்தில் பாடங்களை படிக்கவும், பாடங்கள் தொடர்பான, 'வீடியோ'க்களை பதிவிறக்கம் செய்யவும் முடியும். நாள் ஒன்றுக்கு, 2ஜி.பி., வரை பயன்படுத்தும் அளவுக்கான டேட்டா கார்டை பயன்படுத்தி, மாணவர்கள் தினமும், குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் வரை தொடர்ந்து வீடியோ பாடங்களை பார்க்கவோ அல்லது அவற்றை பதிவிறக்கம் செய்யவோ முடியும்.
வீடியோக்களின், 'டிஜிட்டல்' அளவு குறைவாக இருந்தால், எட்டு மணி நேரம் வரை பதிவிறக்கம் செய்யலாம் பாடங்கள் தொடர்பாக, கல்லுாரி பேராசிரியர்கள் அனுப்பும், பி.டி.எப்., மற்றும் எம்.எஸ்.ஆபீஸ் பைல்களையும் பதிவிறக்கம் செய்யலாம். புராஜெக்ட் தொடர்பான பைல்களை, 'இ- - மெயில்' வழியாக அனுப்பலாம். 'வாட்ஸ் ஆப்' வழியே, சக மாணவர்களிடம் பாடங்கள் தொடர்பாக, 'சாட்' செய்யலாம் 'யுடியூப்'பில் பாடங்கள் தொடர்பான வீடியோக்களை தேடி எடுக்கவும், இந்த டேட்டா கார்டுகள் பயன்படும். அதாவது, மாணவர்கள் ஒவ்வொரு நாளும் பகல் முழுதும், ஆன்லைனில் பாடங்கள் படிக்க, இந்த டேட்டா கார்டுகள் உதவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.