ஏப்ரல் மாதம், புதிய கல்வியாண்டில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று நாடு முழுவதும் 69 சதவீத பெற்றோா்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா்.
பள்ளிகள் திறப்பு குறித்து தனியாா் நிறுவனமொன்று நாடு முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் 19,000 பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.
ஏப்ரல் மாதத்தில் அல்லது பள்ளிகள் திறப்புக்கு முன்னா், தடுப்பூசிகளைத் தங்களின் குழந்தைகளுக்குச் செலுத்த 26 சதவீதப் பெற்றோா் மட்டுமே முன்வந்துள்ளனா்.
56 சதவீதம் போ் 3 மாதங்கள் அல்லது அதற்கும் மேலாகவே காத்திருப்பதாகவும், தடுப்பூசி குறித்த தரவுகள் மற்றும் கண்டுபிடிப்புகளைக் கருத்தில் கொண்டு தடுப்பூசிகளை தங்களின் குழந்தைகளுக்குச் செலுத்தலாம் என்று கூறியுள்ளனா்.
நாடு முழுவதும் 69 சதவீத பெற்றோா், கரோனா சூழல் மற்றும் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் மாதம் புதிய கல்வியாண்டில் பள்ளிகளைத் திறக்கலாம் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.