''கொரோனா தடுப்புக்கான கட்டுப்பாடுகளுடன்பள்ளிகள் திறக்கப்படுவதால், வருகைப் பதிவு இருக்காது,'' என, ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
தமிழகம் முழுதும் பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இப்பணிகளை, ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர் நிர்மல்ராஜ், திருச்சி கலெக்டர் சிவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். நிர்மல்ராஜ் கூறியதாவது:கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கான கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்படுவதால், நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தலைமையிலான குழு, பள்ளிகளில் ஆய்வு நடத்தி வருகிறது.
பள்ளிகள் திறக்கப்பட்டாலும், 'ஆன்லைன்' வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும்.விருப்பமுள்ள மாணவர்கள், பள்ளிக்கு வரலாம். பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை. பள்ளிகளில் வருகைப் பதிவும் கடைப்பிடிக்கப்பட மாட்டாது. பொதுத்தேர்வுகள் குறித்து, முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.