WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 19, 2021

பள்ளிகள் இன்று திறப்பு.

தமிழகத்தில், 10 மாதங்களுக்கு பின், இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு, கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


கொரோனா தொற்று பரவல் காரணமாக, பள்ளி, கல்லுாரிகள், 2020 மார்ச்சில் மூடப்பட்டன. 'ஆன்லைன்' வழியில் மட்டும் பாடங்கள் நடத்தப்படுகின்றன. தற்போது, நோய் பரவல் குறைந்து விட்டதால், பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, பள்ளிகளை திறப்பது குறித்து, ஜனவரி முதல் வாரத்தில், கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற பெரும்பாலான பெற்றோர், பள்ளிகளை திறக்க கோரினர்.நேரடி வகுப்புகள் நடத்தாவிட்டால், பொதுத் தேர்வு எழுத முடியாது; அதிக மதிப்பெண் பெற முடியாது என, மாணவர்களும் கவலை அடைந்தனர்.

இதையடுத்து, பள்ளிகளை திறக்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டார்.இதன்படி, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும், இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் மேற்பார்வையில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில், குழுக்கள் அமைக்கப்பட்டு, பள்ளி திறப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றும், நாளையும், மாணவர்களுக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங்; கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

பின், பொதுத் தேர்வுக்கான முக்கியத்துவம், குறைக்கப்பட்ட பாடத்திட்ட விபரங்கள் குறித்து விளக்கப்பட உள்ளன.தொடர்ந்து, நாளை மறுதினம் முதல், முழுமையாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பெற்றோரின் எழுத்துப்பூர்வ சம்மதம் பெற்று வர வேண்டும் என்றும், காய்ச்சல் உள்ளவர்கள், பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.மேலும், தொற்று ஏற்படாமல் தடுக்க, மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

நுழைவு தேர்வுக்குஅனைத்தும் தேவை!தொற்று சூழலால், நேரடி வகுப்புகள் நடத்தாமல், நடப்பு கல்வி ஆண்டு முடியும் நிலைக்கு வந்துள்ளது. அதனால், ஒவ்வொரு வாரமும் ஆறு நாட்கள் வீதம் வகுப்புகள் நடத்த, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.குறுகிய காலத்தில் முழுமையாக பாடங்களை படிக்க முடியாது என்பதால், பாடத்திட்டம், 35 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது. ஆனாலும், நீட், ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற விரும்புவோர், முழுமையான பாடத் திட்டங்களை படிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.